Home » » குறும்பட இயக்குனர் கலைஞர் அகரம் செ.துஜியந்தன் கௌரவிப்பு

குறும்பட இயக்குனர் கலைஞர் அகரம் செ.துஜியந்தன் கௌரவிப்பு

 



இன்று கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் இலக்கிய விழா கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து கொண்டார்.




இங்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் வித்தகர் விருது, இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்ட்டனர். அத்துடன் சிறந்த நூலுக்கான பரிசுகள், சிறந்த படைப்பாக்கங்களுக்கான பரிசுகள் மற்றும் சிறந்த குறுந்திரைப்படங்களுக்கான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் பாண்டிருப்பைச்சேர்ந்த பல்துறைக்கலைஞர் அகரம் செ.துஜியந்தனின்  பார்வை குறுந்திரைப்படம் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதினையும், பரிசையும் பெற்றுள்ளது. கல்முனை தமிழ் பிரதேசத்தில் முதன் முதல் குறுந்திரைப்படம் தயாரித்து, இயக்கி, நடித்த குறுந்திரைப்படத்தின் முன்னோடியாக அகரம் செ.துஜியந்தன் திகழ்கின்றார்.

இவர் இதுவரை  விமோசனம் விரட்டியடி, பாழாய்ப்போன பயணம், வட்டி, யார் பிச்சைக்காரன், பார்வை, வெறுஞ்சோறு போன்ற குறுந்திரைப்படங்களை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். அத்துடன் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா போட்டியில் பார்வை குறுந்திரைப்படமும் தெரிவு செயய்ப்பட்டு பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |