Advertisement

Responsive Advertisement

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?

 


மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்காக சுகாதார ஆலோசனையின் படி கடுமையான திட்டம் வகுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று கல்வியமைச்சில் நடைபெறவுள்ளது.

சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments