அபு ஹின்சா
கல்முனை பிரதேசம் கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் அந்த பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்று கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி. எம்.எல். பண்டார நாயக்கவுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக அந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் முதற்கட்ட வேலைத்திட்டங்கள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் நடைபெறும் இவ்வேலைத்திட்டம் பொருட்கள் கொள்வனவு செய்தல் மற்றும் பொதியிடல் காரணமாக எதிர்வரும் புதன் கிழமை அளவில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் எங்கள் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் சிக்கலில் உள்ள இந்த காலகட்டத்தில் கல்முனை பிரதேச முடக்கத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் தான் தொடர்ந்தும் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
0 Comments