Advertisement

Responsive Advertisement

ரூபா 60 கோடி பொருட்களுடன் ஸ்ரீலங்கா கடற்படையிடம் சிக்கிய நால்வர்

 


நீர்கொழும்பு கடற்பரப்பில் பாரிய அளவான போதைப்பொருட்களுடன் படகு ஒன்றில் பயணித்த நால்வரை கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

குறித்த படகில் இருந்து 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் சுமார் 60 கோடி ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

கைதான நால்வருடன் அவர்கள் பயன்படுத்திய பல நாள் இழுவைப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments