மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள அரசாங்க பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைத் தவிர அனைத்து பாடசாலைகளும் ஜனவரி 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
பாலர் பாடசாலைகளும் இதே முறையில் மீண்டும் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் தரம் 1 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சஞ்ஜீவ பண்டார முன்வைத்துள்ளார்.
0 comments: