Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குடும்ப தகராரு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 15 வயதுடைய சிறுவன் பலி; அக்கரைப்பற்று பகுதியில் துயர சம்பவம்..!!

 


அம்பாறை- அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அக்கறைப்பற்று- அட்டாளைச்சேனை பகுதியில் குடும்ப தகராரு காரணமாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுவன் உடனடியாக அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments