Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கருணாவை கத்தியுடன் சந்திக்க சென்றவர் கைது

 


கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை , நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலிற்கு பசளைகளை  இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணாவை  சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments