மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் காத்தான்குடியில் 07 பேரும், ஓட்டமாவடியில் 4 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும், களுவாஞ்சிகுடி பகுதியில் 4 பேரும், மட்டக்களப்பு நகர் பகுதியில் ஒருவரும், கிரான் பகுதியிலிருந்து ஒருவரும் ஆக மொத்தம் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர் ஒலுவிலை சேர்ந்த போலீஸ் உத்தியோகஸ்தர் எனவும், இவருடன் நேரடி தொடர்பை பேணிய 75 பேர் இனங்காணப்பட்டு அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 250 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
0 comments: