Advertisement

Responsive Advertisement

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சிகளும் அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள்,வெடி பொருட்களுக்கான 178 வயர் றோல்கள்,105அலுமினியம் குச்சிகள்,31வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments