இலங்கையில் மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44573ஆக அதிகரித்துள்ளது. இத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37252ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 211 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
0 Comments