Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் 18 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

திருகோணமலையில் 18 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.


திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா,லவ்லேன், சிறிமாபுர பகுதிகளில் கடந்த 30 ஆம் திகதி 42 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவருக்கும், மேலதிகமாக திருகோணமலை நகரில் ஏழு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,அதில் 3 பெண்கள் உட்பட இளைஞர் ஒருவரும் அடங்குவதாகவும்,திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருகோணமலை சிறிமாபுர பகுதியில் 93 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்,மொத்தமாக 18 புதிய தொற்றாளர்கள் 4.00மணி வரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் 148 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments