Home » » கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலய அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வும் !

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலய அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வும் !




நூருல் ஹுதா உமர்

2021 ஆம் ஆண்டின் அரச ஊழியர்களின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புது வருடமொன்றின் ஆரம்பத்தைக் கொண்டாடும் இந்நிகழ்வையொட்டிய நிகழ்வு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தில் கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியம் தலைமைiயில் நடைபெற்றது.

 கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியத்தினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர், ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்நிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக்கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை கட்யெழுப்புவதற்காக  சத்தியபிரமானமும் உறுதியுரையும் வழங்கப்பட்டது.

 அலுவலக உத்தியோகத்தர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொது மக்களின் தேவைகளுக்காக கடமை ஆற்ற வேண்டிய அவசியத்தை நிறைவேற்று பொறியியலாளர்  வலியுறுத்தியதோடு வினைத்திறனுடனும், பற்றுறுதி வாய்ந்ததாக, உறுதியான எண்ணத்துடன் நேர்மையாக மக்களுக்கு சார்பாக சேவையாற்றுவதற்குமாக எம்மை தயாா்படுத்த வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் பொறியலாளர் எம்.ஏ.எம்.எம். அனஸ் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள், பிரதம இலிகிதர் ஏ.சி.எம். நிஸார் அடங்களாக கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |