வி.ரி.சகாதேவராஜா)
கடந்த 4 தினங்களாக முடக்கப்பட்ட கல்முனையின், வடக்கு தமிழ் பிரதேசத்தில் நேற்று(31) வியாழக்கிழமை மாலை பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் எ.எல்.எம்.ஜரீன், பொதுச்சுகாதார பரிசோதகர்களான சா.வேல்முருகு, எஸ்.யோகானந்தம், பி.எம்.எம்.தஸ்றீன், மற்றும் சிரேஸ்ட ஆய்வுகூட பரிசோதகர் ஆர்.அகிலன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட எழுந்தமான சோதனையில் 101 தமிழ் சிங்கள மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
அனைவருக்கும் நெகடிவ் பெறுபேறு கிடைத்திருக்கிறது.
0 Comments