2021 ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளின் ஆரம்ப நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எம்.சபேஸ்குமாரின் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் இன்று (01.01.2021) நடைபெற்றது.
இதன் போது அனைவருக்கும் இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டதுடன் கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய தேசியக்கொடி, பாடசாலைக்கொடி என்பன ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் அனைவராலும் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள கல்வி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டு அதிபரால் சிற்றுரை ஆற்றப்பட்டதுடன் அதிபர், வருகை தந்திருந்த அனைவருக்கும் குறிப்புப் புத்தகங்களையும், பேனாக்களையும் வழங்கி ஊக்கப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments