செ.துஜியந்தன்
பிரதமர் மகிந்தராஜபக்சவின் எண்ணக்கருவில் உருவான அறநெறிப்பாடசாலைகளை ஆரம்பித்து வைக்கும் தேசிய நிகழ்வுகளின் ஒன்றாக அறநெறிப்பாடசாலை மற்றும் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் அம்பாறை சம்மாந்துறை கோரக்கல் கிராமத்தில் பாலர் கல்விப் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ்; சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் எற்பாட்டில் அம்பாறை மாவட்ட அன்பே சிவம் அமைப்பின் அணைப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஓய்வு நிலை ஆசிரியை மதியழகன் மீனா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் சம்மாந்துறை பாலர் பாடசாலை உதவிக் கல்விப்பணிப்பாளர் ரஹீம், சம்மாந்துறை அகோர மாரியம்மன் ஆலய தலைவர் பாலசுப்பிரமணியம், உபதலைவர் மோகன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வினோஜ்குமார் உட்பட சிறுவர்கள் , பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலர் கல்விப்பூங்காவிற்கான அனுசரனையை சுவிஸ்லாந்து கணேசலிங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: