மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் வீதியோரத்தில் உள்ள பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவன் இழுத்து அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கல்லடியிலுள்ள சினிமா தியட்டருக்கு அருகாமையில் கல்முனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றின் முதியவரான பெண் ஒருவர் சம்பவதினமான நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகாமையில் உள்ள வீதியோரத்தில் இருந்த பூமரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரேன மோட்டர் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞர் ஒருவன் அவரின் கழுத்தில் இருந்த ஒன்றரைப் பவுண் கொண்ட தங்க சங்கிலியை இழுத்து அறுத்துச் சென்றுள்ளான். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெருத்தப்பட்டிருந்த சீசிரிவீ கமரா மூலம் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான இறக்காமத்தைச் சேர்ந்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் அதனை விற்று நீண்டகாலம் என தெரியவந்ததையடுத்து அந்த மோட்டர் சைக்கில் 4 பேர் வாங்கி விற்றுள்ளதாகவும் கடைசியாக வாங்கியவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாகவும் இந்த திருட்டுப்போன மோட்டர் சைக்கிளின் இலக்கத்தை வேறு மோட்டர் சைக்கிளுக்கு மாற்றி இந்தகொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments: