Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- அரசடியில் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்ரிஜன் பரீட்சையில் 3 பேருக்கு தொற்று!!

 


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முடக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு அரசடி 177 ஏ கிராம சேவகர் பிரிவில் உள்ள 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்ரிஜன் பரிசோதனைல் 3 பேர் தொற்றுக்குள்ளானதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.

கொரோனாவினால் மரணமடைந்த வயோதிபர் வசித்த குறித்த கிராம சேவகர் பிரிவு முதல் முடக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே தொற்றுள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு சிகிட்சை நிலையத்திற்கு அனுப்பபபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாகவும் சமூக இடைவெளியைப் பேணியும் பன்சல வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு சந்தை வளாகத்தினுள் பரிசோதனை நடாத்தப்பட்டதோடு குறித்த வளாகம் உள்ளிட்ட வீதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments