Advertisement

Responsive Advertisement

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன- நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெல்லாவெளியில் புதிதாக அமையப்பெற்றுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களுமக்கு ஒரு உதவியாக அமையும். இதனை அமைப்பதற்காக இதன் உரிமையாளரான ரஜனிக்காந் அவர்கள் பல தடங்கல்கள் வந்தபோதும், இது இப்பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்நிலையில் அவர் மிகவும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டுதான் இதனை அமைந்துள்ளார். ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைய வேண்டுமானால் இவ்வாறான விடையங்கள் வாயிலாகத்தான் அபிவிருத்தி அடைய வேண்டும். இவற்றினைவிடுத்து அபிவிருத்தி என்ற போரிவையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலமாகத்தான் இந்தக் காலம் இருக்கின்றனது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியில் புதிதாக அமையப்பெற்ற எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (18) நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தைத் திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

அபிவிருத்தி என்ற போரிவையில் எமது பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலங்கள் மாறவேண்டும். இந்த நிலையில் இந்த நாட்டின் நிலமையை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம் அதற்கு எற்றாபோல் அனைவரும் வாழவும் பழகிகக் கொள்ளவும் வேண்டும். அபிவிருத்தி எனும் மாயைக்குள் எமது மக்கள் அகப்பட்டு, தற்போது எமது பிரதேசத்தைப் பறிகொடுக்கும் நிலமைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். மேலும் உலகத்தையும், கொழும்பையும் ஆட்டிப்படைத்து தற்போது எமது மாவட்டத்தையும் ஆட்டிப்படைக்கின்ற கொவிட் - 19 எனப்படும் கொரோன வைரஸ் மக்களது உடல் நிலையைப் பாதிப்பது மாத்திரமல்லாமல். மனோநிலையையும், பொருhளாதாரத்தையும் பாதித்திருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் இந்த வைரசுடன் வாழ்வதற்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். அதற்குரிய தடுப்பூசி மிகவிரைவில் வரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறிகின்றோம்.

இந்தநிலையில் கொவிட் - 19 இருப்பதாக அடையாளப் படுத்தப்பட்ட மனிதர்களை சிகிச்சை நிலையத்திற்கு, கொண்டு செல்லப்பட்டு, அங்கு குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், அவர்களிடமிருந்து அந்த வைரஸ் வெளியேறி விட்டதா என்பதை பரிசோதிக்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்லாமல், முழு இலங்கையிலும், அவர்களை வீட்டிற்கு அனுப்பப்படுவதென்பது, வேண்டத்தகாத செயற்பாடாகவுள்ளது. இதனையிட்டு மிகவும் வேதனையாகவு உள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறு பல வைரஸ் தாக்கங்களிற்கு சிகிச்சை பெற்றும் சில வாரங்களின் பின்னர் அது வேறு நோய்த்தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களும், உண்டு. ஆனால் இந்த நிலையில் கொவிட் - 19 இருப்பதாக அடையாளப் படுத்தப்பட்ட மனிதர்களை சிகிச்சை நிலையத்திற்கு, கொண்டு செல்லப்பட்டு, அங்கு குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், அவர்களிடமிருந்து அந்த வைரஸ் வெளியேறி விட்டதா என்பதை பரிசோதிக்காமல் மீண்டும் அவர்களை சமூகத்துடள் இணைப்பதென்பது, ஏற்றுக் கொள்ளமுடியாது. எனவே அவ்வாறானவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பப்படும்போதும், மீண்டும், அவர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை பெற்று அபரிசோதித்த பின்னரே அனுப்பப்படல் வேண்டும் என்பது எனது எண்ணமாகும் இது ஊடகங்கள் வாயிலாக செல்ல வேண்டியவர்களின் காதுகளுக்குச் செல்லவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments