இலங்கையில் நேற்று மேலும் 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,901 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53689ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 649 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதன்படி, இதுவரையில் பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45820 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்று உறுதியானவர்களில் 7599 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, இலங்கையில் இதுவரை 270 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments