Advertisement

Responsive Advertisement

மகிழூர் பகுதியில் நீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!

 


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து செவ்வாய்கிழமை (26) மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…நீர் நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய அங்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சடலத்தை அவதானிதானித்துள்ளனர்.

சனசமூக வீதி மகழூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 23.01.2021 அன்று காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போனமை தொடர்பில் அன்றயத்தினமே உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய காணாமல் போன பெண் நீர் நிலையில் உயிரிழந்த நிலையில் புதன்கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான மகிழூர் கிராமத்தைச் 40 வயதுடை சேர்ந்த யோகராசா புஸ்ப்பலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments