Advertisement

Responsive Advertisement

பட்டிருப்பில் பட்டதாரி பயிலுனர்களுக்கான மாதிரி வகுப்பறை கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுப்பு


செ.துஜியந்தன் 


பட்டிருப்புக் கல்வி வலயத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளவர்களுக்கான திசை முகப்படுத்தல் திட்டத்தின் கீழ் மாதிரி வகுப்பறை கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.



பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் வழிகாட்டலில் வலயத்தில் நியமிக்கப்பட்டுள்ள 247 பட்டதாரி பயிலுனர்களும் வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கும், பல்வேறு பிரிவுகளுக்கும் என பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய பெரியகல்லாறு மெதடிஸ்ஸ மிஷன்  பெண்கள் பாடசாலையில்  மாதிரி வகுப்பறை கற்பித்தல் செயற்பாடுகள் கோட்டக்கல்வி பணிப்பாளர் பி.திவிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவிக்கல்விப்பணிப்பாளர் தயாளசீலன், அதிபர் எம்.சந்திரசேகரன் உட்பட பட்டதாரி பயிலுனர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியைகளால் சிறந்த முறையில் எவ்வாறு வகுப்பறைக் கற்பித்தலை மேற்கொள்வது என்பது தொடர்பில் செயற்பாட்டு முறையில் பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments