Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருதில் மூடப்பட்டது வர்த்தக நிலையம் - 4 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

 


கல்முனை - சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையமொன்று மூடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

அத்துடன் அங்கு பணியாற்றிய நான்கு பேர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நான்கு பேருக்கும் எதிராக நாளை வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments