Home » » 2.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் பிரதேச தவிசாளரால் ஆரம்பித்து வைப்பு.

2.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் பிரதேச தவிசாளரால் ஆரம்பித்து வைப்பு.

 


நூருல் ஹுதா உமர்  


அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை மோதினார் வீதி 2.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச சபை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்  (LDSP) ஊடாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம். ஏ றாசிக், உதவித் தவிசாளர் ஏ.எம் அஸ்ஹர், இசங்கணிச்சீமை வட்டார  அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்    ரீ.எம் ஐய்யுப், அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி பர்ஷாத் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ. சியான் ஆகியோரினால் அடிக்கல் நடப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்த பின்னர் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம். ஏ றாசிக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதேச சபை  அபிவிருத்தி வேலைத்திட்டம் (LDSP) ஊடாகவும் மற்றும் ஒரு லட்சம் பாதை  ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்தின் ஊடாகவும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு பலமில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ச்சியாக எமது பிராந்தியத்தில் பாதைகள் பூங்காக்கள் என வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் அக்கரைப்பற்று பிரதேச சபையை  எமது பிராந்திய மக்களுக்கு வழங்கிய தேசிய காங்கிரசின் தலைமை ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களுக்கு இந்த பிராந்திய மக்கள் சார்பாக தவிசாளர் நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் எல் எம்   இர்பான், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஐ.எல் பாயிஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. தமீம் இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் முக்கியஸ்தர்கள் ஊர் பிரமுகர்கள் உட்பட இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |