கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பளை பெரிய பாலத்திற்கு சமீபமாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று 2021.01.01 மாலையில் இடம்பெற்றுள்ளது.
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் வீதியில் கலியோட பாலத்திற்கும் அட்டப்பள்ளம் பெரிய பாலத்திற்கும் இடையே vitz கார் உடன் மோட்டர் சைக்கில் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. மோட்டர்சைக்கில் வந்தவர்கள் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் கடமைபுரியும் பெண் வைத்தியருக்கு சொந்தமானது என்பதுடன், மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் குடிபோதையில் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments: