மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேரும் ,ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேரும், இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுகாதார அமைச்சின் ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 70 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் 769 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த என்ண்ணிக்கை 55 ஆயிரத்து 189 ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments