Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

 


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிசார் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 11 பேருக்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 533 ஆக அதிகரித்துள்ளதாக இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிசார், செங்கலடி சுகாதார பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேர் உட்பட 11 பேருக்கு கடந்த 24 மணித்தியாலயத்தில் புதிய தொற்றாளராக கண்டறியப்பட்டது.

இதேவேளை மாவட்டத்தில் இதுவரை 533 பேர் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி சுகாதார பிரிவில் 8 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments