Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை மாணவிக்கு கொரோனா தொற்று- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தலில்...!!

 


நுவரெலியா- நாவலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் 12 ஆம் தரம் கல்வி பயிலும் மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகளிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவியை தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த மாணவியுடன் தொடர்பில் இருந்த நான்கு ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை குறித்த பாடசாலை, தற்போது தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments