கம்பொல, வெலிகல்ல, கெலிஓயா, கொசின்னா, மற்றும் பேராதெனியவில் உள்ள சுமார் 400 கடைகளை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஊழியர் COVID-19 பாதிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்தே சுமார் 400 கடைகளை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்..
மூடப்பட்ட கடைகளில் 120 கம்பொல பகுதியில் உள்ளவை..உள்ளவர்கள் இன்று பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கம்பொல நகர சபையின் மேயர் சமந்தா அருண குமார தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் சோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கம்பொல நகர எல்லைக்குள் மட்டும் 33 COVID-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் “கம்பொல நகரம் இன்று ஆபத்தான நிலையில் இருப்பதால் முடிந்தவரை பயணத்தை கட்டுப்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்தியாவசிய தேவைகளைத் தவிர நகரத்திற்கு வர வேண்டாம்.” என்று மேயர் சமந்தா அருண குமார கேட்டுக்கொண்டார்.
0 comments: