காரைதீவு சகா)கல்முனை வலயத்தில் நேற்று(7) திங்கட்கிழமை 906 மாணவர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமுகமளித்தனர் என்று கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்தார்.
கல்முனைவலயத்திலுள்ள கல்முனை (தமிழ், முஸ்லிம்) சாய்ந்தமருது காரைதீவு நிந்தவுர் ஆகிய 5 கோட்டக்கல்விப்பிரிவுகளில் 65பாடசாலைகள் உள்ளன. அவற்றில் கல்விபயிலும் 37,213மாணவர்க்கு 2358 ஆசிரியர்கள் கற்பித்துவருகின்றனர்.
சமகாலத்தில் கொரோனா காரணமாக கல்வியமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைவாக தரம் 6முதல் 13வரையான பாடசாலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக கல்முனை வலயத்தில் 23ஆயிரம் மாணவர்கள் குறித்த வகுப்புகளில் பயில்கின்றனர். அவர்களில் கொரோனா காரணமாக 50வீத வரவை எதிர்பார்ப்பது வழக்கம். அதாவது 11500 மாணவர்கள் வருகை தந்திருக்கவேண்டும். ஆனால் நேற்றையதினம் ஆக 906 மாணவர் மாத்திரமே வருகை தந்திருந்தனர். ஆசிரியர்கள் 64வீதமானோர் பாடசாலைக்கு சமுகமளித்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி தெளிவான தகவல் இல்லாத காரணத்தினால்தான் பிள்ளைகள் பாடசாலைக்கு வரவில்லையென பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் கொரோனாத்தொற்று அதிகரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments