Advertisement

Responsive Advertisement

பொலிஸ் அதிகாரி திடீர் உயிரிழப்பு!

 


திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கொள்ளுப்பிட்டி குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.


கொழும்பு, காலி முகத்திடலில் இன்று காலை உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே அந்த அதிகாரி திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய்வாய்ப்பட்ட உடனேயே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments