கிழக்கு மாகாணத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடியில் இருவரும், கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் 10 பேரும், சாய்ந்தமருது பகுதியில் ஒருவருமாக மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன் அக்கரைப்பற்று பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும் முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பெற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் மேலும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments