கொழும்பு மாவட்டத்தில் சில தொடர்மாடிக் குடியிருப்புக்கள் டிசெம்பர் 6 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு செயலகப் பிரிவில் ஐந்து தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளும், திம்பிஸிறிகாயா பிரிவில் மூன்று வீட்டுத் தொகுதிகளும், மொரட்டுவவில் ஒரு வீடமைப்புத் தொகுதியும் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்படும் நிலையிலேயே முடக்கல் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: