Advertisement

Responsive Advertisement

தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர்! அடுத்த 12 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் - மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 




தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும். அப்போது 155 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி 6 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 11.30 மணிக்கு கடலூருக்கு 310 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 320 கி.மீட்டர் தொலைவிலும் இருந்தது. சென்னைக்கு 380 கி.மீட்டர் தொலைவில் நகர்ந்து செல்லும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில் மழையுடனுடனான கால நிலை தொடரும் சூழ்நிலையில், வட மாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும்.

இந்நிலையில், மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

யாழ்ப்பாணம் 0212222609

திருநெல்வேலி, கோண்டாவில் 0212222498

சுன்னாகம் 0212240301

சாவகச்சேரி 0212270040

பருத்தித்துறை 0212263257

வட்டுக்கோட்டை 0212250855

வேலனை 0212211525

Post a Comment

0 Comments