மொனராகலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்துடன் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இந்த மோதல் சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற இந்த மோதலைத் தடுப்பதற்கு அதிகாரிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும் பதற்றத்திற்கு மத்தியில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
0 Comments