Home » » அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படலாம்; வர்த்தகர்கள் எச்சரிக்கை!

அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படலாம்; வர்த்தகர்கள் எச்சரிக்கை!

 


அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள அரிசிக்கான ஆகக்கூடிய விற்பனை விலை காரணமாக நாட்டில் அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படலாம் என்று வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் அரிசிக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்தது.

இதன்படி சம்பா 94 ரூபாவாகவும், நாடு 92 ரூபாவாகவும், சிவப்பு பச்சையரிசி 89 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கம் அறிவித்துள்ள ஆகக்கூடிய சில்லறை விலைக்கு குறைவாக தமக்கு அரசியை கொள்வனவு செய்யமுடியாதுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் குறித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யமுடியாது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அரசாங்கம் விதித்துள்ள ஆகக்கூடிய சில்லறை விலை அறிவிப்பை வர்த்தகர்கள் செயற்படுத்தவேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பெரிய மற்றும் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் இதனை செயற்படுத்தாது போனால் அரசாங்கம் சதோசவின் ஊடாக இந்த விலை குறைப்பை அமுல் செய்யுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |