மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 61ஆக உயர்வடைந்துள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (2020.11.08) அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்வடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த முதல் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தாயுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேலிய கொடை மீன்சந்தை தொத்தனியையடுத்து மட்டக்களப்பு கோரளைப்பறறு மத்தியில் 42 பேரும், செங்கலடியில் ஒருவரும், கிரானில் ஒருவரும், வெல்லாவெளியில் ஒருவரும், பட்டிருப்பில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவரும், ஏறாவூரில் 7 பேரும், செங்கலடியில் ஒருவரும், மட்டக்களப்பில் 5 பேருமாக மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்
இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மக்கள் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் தேவையில்லாது நடமாடுவதை குறைத்து வீடுகளில் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறருடனான உரையாடலின் போது முகக்கவசத்தை முறையாக அணியுமாறும் வெளி இடங்களுக்கு போய் வந்தவுடன் கை, கால்களை கழுவுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை உடனடியாக பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவித்து அவருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
0 Comments