கிழக்கு மற்றும் வட மாகாணங்களின் கரையோர பகுதிகளில், காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
வளிமண்லவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments: