Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் ஆற்றைக் கடக்கும்போது காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள மாவடியோடை குமுக்கட்டு எனுமிடத்தில் ஆற்றைக் கடக்கும்போது காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை மாவடியோடை – குமுக்கட்டுஓடை ஆற்றைக் கடக்கும்போது ஏறாவூர் வாளியப்பா தைக்கா வீதியை அண்டி வசிக்கும் ஹச்சிமுஹம்மது அப்துல்லாஹ் (வயது 68) என்பவர் காணாமல் போயிருந்தார்.

அவரை தேடும் பணிகள் பகல் இரவாக தொடர்ந்த வேளையில் செவ்வாய்க்கிழமை 24.11.2020 காலை குமுக்கட்டு ஓடையைத் தாண்டி சற்றுத் தொலைவில் ஆற்று மர வேர் இடுக்குகளுக்குள் அகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments