இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (23) வெளியிடப்பட்டுள்ளது. தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிதாக உருவக்கப்பட்ட இந்த புதிய அமைச்சுகளின் நோக்கம் மற்றும் அவற்றின் கடமைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சானது, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை, நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அமைதியான மற்றும் சுதந்திரமான சூழலை உருவாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய பொலிஸ் அகாடெமி மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஆகியன பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
நாட்டின் சுகாதாரம்இ கல்விஇ நலன்புரி, பொது சேவைகள் மற்றும் வணிகத் துறையை வினைத்திறன்மிக்க முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச இலத்திரனியல் வலையமைப்புகளை ஒருங்கிணைப்பு செய்யும் அதேவேளை, டிஜிட்டல் அரசாங்க சேவைகளை நிறுவும் நோக்கில் தொழில்நுட்ப அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம்இ தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை தர நிர்ணய நிறுவனம்இ ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் உட்பட 10 நிறுவனங்கள் இந்த அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
0 comments: