கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள் தற்போது இலங்கை தள்ளப்பட்டுவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ராசியா பெண்டிசே மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மக்கள் நடந்து கொள்ளும் முறையிலேயே எதிர்வரும் நாட்களில் பாரதூர விளைவுகள் ஏற்படுமா இல்லையா என்பது தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபாய வலயத்தில் இலங்கை இருந்தாலும் அதிலிருந்து மீண்டெழும் இடத்தில்தான் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்தும் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments: