Advertisement

Responsive Advertisement

போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது இளைஞன் கைது...!!

 


கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காங்கேசன்துறைசிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 335 கிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை, இம்பசிட்டி பகுதியில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments