Home »
எமது பகுதிச் செய்திகள்
» வெலிக்கட சிறைச்சாலையில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
வெலிக்கட சிறைச்சாலையில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
கொழும்பு, வெலிக்கட சிறைச்சாலையில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு கைதிகளும், ஒரு பெண் சிறைச்சாலை அதிகாரியொருவமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை அதிகாரி முல்லேரியாவில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் வைத்தயசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேநேரம் கைதிகள் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சிறைச்சாலையில் கொரோனா எவ்வாறு பரவியது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அதேநேரம் சிறைச்சாலை வளாகமும் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: