Home » » அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன்? நீடிக்கும் குழப்பநிலை!!

அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன்? நீடிக்கும் குழப்பநிலை!!

 


அமெரிக்க அரச தலைவர் தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு முடிந்து நீண்ட நேரமாகியும் முடிவுகள் வெளியாகாத நிலைமை குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன

எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த முறைதேர்தலில் பல இலட்சக்கணக்கான வாக்காளர்கள் தபால் மூல வாக்குகளை செலுத்தியிருப்பதால் சகல வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரமையமாக வெள்ளைமாளிகையை பிடிக்கப் போவது தற்போதைய அரச தலைவர் டொனால்ட் ரம்பா, இல்லை அவரது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இந்த செய்தி விவரணம் எழுதப்படும் வரை தெளிவான முடிவாக வெளிப்படவில்லை.

எனினும் ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கன்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் வேர்ஜினியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில் ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல நியூயோர்க், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ், வெர்மொண்ட், நியூஜெர்ஸி ஆகிய மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

முக்கிய மாகாணங்களான ஒஹையோ, புளோரிடாவில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பல மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ட்ரம்ப் தொடர்ந்து கடும் போட்டியைக் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தபால் வாக்குகளை எண்ணும் பட்சத்தில் முடிவும் ஜோ பைடனுக்கே சாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே அமெரிக்க அரசதலைவர் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும். ஆனால் இந்தமுறை மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தபால் மூலம் தமது வாக்குகளை செலுத்தியிருப்பதால் வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதம் ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, வாக்குப்பதிவு நாளன்று இரவு எல்லா வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டாவிட்டாலும் வெற்றி பெற்றவர் யார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும்.

குறிப்பாக இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் இனிமேல் தோற்கடிக்கப்பட முடியாத அளவுக்கு முன்னிலைக்கு வந்தவுடன் இந்த கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும்

இது அதிகாரபூர்வமான இறுதி முடிவு அல்ல என்றாலும் இது எப்போதும் இறுதி முடிவுகளுடன் பொருந்திவரும்.

அமெரிக்க அரசதலைவர் தேர்தலை பொறுத்தவரை தேசிய அளவில் பெறும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அரசதலைவள் தெரிவுசெய்யப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மாகாணங்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை வெல்வதன் மூலமாகவே வெற்றி பெறுகிறார்கள்.

2016 தேர்தலில் அதிகாலை 2.30 மணிக்கு, விஸ்கொன்சின் மாநிலத்தில் ரம்ப் வெற்றி பெற்றவுடன், அவரது தேர்தல் சபை வாக்குகள் எண்ணிக்கை 270ஐக் கடந்தது. அதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பிரச்சனையால் வழக்கத்தைவிட நிறைய பேர் தபால்மூலமாக வாக்களித்திருந்ததால் தபால் வாக்குகளை எண்ணும் போது வாக்களரின் கையெழுத்தும்இ முகவரியும் சரிபார்க்கப்படுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது

இவ்வாறான அடையாள சரிபார்ப்பு விதிகள்; தொடர்பாக வழக்குகள் தொடரமுடியும் என்பதால்தான் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம் ரம்ப் சொல்வது குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |