Home » » அனைவரும் சுகாதார நியமங்களை முறையாக கடைப்பிடித்தாலே நாட்டை முழுமையாக திறந்து வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்!!

அனைவரும் சுகாதார நியமங்களை முறையாக கடைப்பிடித்தாலே நாட்டை முழுமையாக திறந்து வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்!!

 


இலங்கையை மீண்டும் திறந்து வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், அனைவரும் சுகாதார நியமங்களை முறையாக கடைப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏன் ஏற்படவில்லை என எண்ண வேண்டும். அவர்கள் தொற்றாளர்களுடன் இருந்தாலும் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதில்லை அதற்கு காரணம் அவர்கள் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதனை அனைவரும் கடைப்பிடிக்கும் நிலையில் நாட்டை தடையின்றி கொண்டு செல்ல முடியும். அப்படியாயின் மக்கள் தொழிலுக்கு செல்லமுடியும் கடைகளை திறக்க முடியும் தொழிற்சாலைகளை செயற்படுத்த முடியும் நாட்டை மீண்டும் திறக்க முடியும்.

ஆகவே முக்கியமாக கைகளை சுத்தப்படுத்துதல் முககவசம் அணிதல் உள்ளிட்ட விடயங்களை பின்பற்ற வேண்டும்.

அதனோடு காய்ச்சல் ஏற்படுமாக இருந்தால் உடனே தனிமைப்படுத்தலில் இருப்பதோடு சுகாதார தரப்பினருக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தினால் மாத்திரமே மக்கள் வீடுகளில் இருக்கின்றனர் இல்லாவிட்டால் யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஆகவே நாட்டை தொடர்ந்தும் கொண்டு செல்ல அனைவரும் உரிய சுகாதார நியமங்களை கடைபிடிக்க வேண்டும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |