மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி செங்கலடி பிரதேசத்தில் ஒருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த ஒருவருக்குமாக மொத்தம் மூன்று பேர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மட்டக்களப்பில் 47 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 18 பேரும் ,அம்பாரை 6 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது
0 Comments