Advertisement

Responsive Advertisement

விவசாய, மீன்பிடி துறையில் அறவிடப்படும் வருமான வரி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீக்கப்படும்- பிரதமர் அறிவிப்பு!!


 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.


தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், 2021.12.31 இற்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்ளூர் நிறுவனங்களுக்கு 50 வீத வருமான வரிச்சலுகை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலியான வரி அறிக்கையை தயாரிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுக்கப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரிக்கான மேன்முறையீட்டு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கையை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆண்டு முன்னெடுக்கவுள்ளதுடன் நூற்றுக்கு 8 வீத வெட் வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய, மீன்பிடி துறையில் அறவிடப்படும் வருமான வரி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments