பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது வரவு செலவுதிட்ட உரையின் ஆரம்பத்தில் கொவிட் 19 மற்றும் ஏனைய தொற்றாநோய்களிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலவச முன்னேற்றமான சுகாதார சேவைக்கான அரசாங்கத்தின் நோக்கங்களை முன்மொழிந்துள்ளார்.
- அரச வருமானம் மற்றும் அரச செலவுக்கு இடையிலான நூறுக்கு 7 வீத இடைவெளியை 4 வீதத்திற்கு குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
- தேசிய வருமானத்தில் உள்ள 90 வீத அரச கடன்களை 70 வீதமாக குறைக்கவும், சர்வதேச கடன்களை குறைத்துக்கொள்ளவும் கவனம் செலுத்தப்படும்.
- மக்களை சார்ந்த அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பாகும், கடந்த காலங்களைப் போன்று இல்லாது பொறுப்புக்கூறலுடனும் வீண் விரயமற்ற அரச சேவையை உருவாக்குவோம், அரச சேவையாளர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம்.
- இறக்குமதி வர்த்தகத்தை விடுத்து முழுமையான விவசாய மற்றும் கமத்தொழில் உற்பத்தியை முதன்மைப்படுத்திய பொருளாதாரமே எமது நோக்கமாகும்.
- கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து எமது மக்களை முழுமையாகக் காப்பாற்றுவதே எமது முக்கிய நோக்கமாக உள்ளது.
0 comments: