Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆண், பெண்களின் ஓய்வூதிய வயதை மாற்ற முன்மொழிவு

 


ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஓய்வூதிய வயதை 60ஆக மாற்ற வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழிவதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறைக்கு தற்போதைய கட்டாய ஓய்வூதிய வயது 60 ஆண்டுகள், தனியார் துறைக்கு 50 ஆண்டுகள் ஆகும். இது பெண்களுக்கு மேலும் குறைவாக உள்ளது.

பெண்களின் சராசரி ஆயுட்காலம் 76.6 ஆண்டுகள் என்றும், ஆண்களுக்கு 72 ஆண்டுகள் என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய ஓய்வு பெறுவதற்கு இரண்டு வெவ்வேறு வயது இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.

Post a Comment

0 Comments