பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான பாதீடு தற்போது பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்தராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபா வரையில் உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.
இதனை பாதீட்டின் ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 Comments