கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி திங்கள்கிழமை தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் உள்ள பிரதேசங்கள் தவிர ஏனைய பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சிப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments: